தூய்மையே வலிமை கேளர்!

தூய்மையே வலிமை கேளர்!
வாய்மையே உயர்வு காணர்!
இயேசுவில் இரண்டும் பெறுவர் (2)

1. சந்திரன் பாதையைக் கண்டாய்!
சமுத்திர ஆழத்தை வென்றாய்!
தூய்மையின் பாதைதான் எங்கே?
என்பதில் ஏதும் உலகினில் இல்லை! – தூய்மையே

2. அழிக்கவும் ஆக்கவும் அணுதான்
பலபல புதுமைகள் நலம்தான்
யாவையும் கண்ட மனிதா
மனத்தூய்மைக்கு மார்க்கம் சொல் எனக்கு! – தூய்மையே

3. தத்துவம் பேசுவார் உண்டு
தீர்க்க சாஸ்திரம் புரட்டுவார் உண்டு
கல்வி கொடுப்பது அறிவு
ஆனால் தேவன் அருளுவது ஞானம்! – தூய்மையே

4. பரிசுத்த ஆவியின் நிறைவு
பரிசுத்தமானதோர் வாழ்வு
வெற்றியின் ஜீவியம் கொள்ள
இயேசு அழைக்கிறார், இணங்கி நீ செல்ல! – தூய்மையே



thuymaiye valimai kelar!

thuymaiye valimai kelar!
vaymaiye uyarvu kanar!
iyesuvil irandum peruvar (2)

1. sanththiran pathaiyaik kanday!
samuththira aazhaththai vendray!
thuymaiyin pathaithan engke?
enpathil eethum ulakinil illai! – thuymaiye

2. azhikkavum aakkavum anuthan
palapala buthumaikal nalamthan
yavaiyum kanda manitha
manaththuymaikku markkam sol enakku! – thuymaiye

3. dhaththuvam pesuvar undu
dheerkka sasathiram buradduvar undu
kalvi kodubpathu arivu
aanal thevan aruluvathu njanam! – thuymaiye

4. parisuthdha aaviyin niraivu
parisuthdhamanathor vazhvu
vetrriyin jeeviyam kolla
iyesu azhaikkirar, inangki nee sella! – thuymaiye